Images
  • fish
    படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 

மீன் செதில்கள் காயங்களைக் குணப்படுத்தக்கூடும் - சிங்கப்பூர் ஆய்வு

மீன் செதில்களில் இருக்கும் ஒருவகைப் புரதம், காயங்களை குணப்படுத்தக்கூடும் எனப் புதிய ஆய்வு கூறுகிறது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அது கண்டறியப்பட்டது.

சமையல் செய்யும் முன்னர், மீனின் செதில்கள் அகற்றப்படும். அந்தச் செதில்களில் இருக்கும் புரதம் இரசாயன ரீதியாக மேம்படுத்தப்பட்டு, தண்ணீரில் கரையும் விதமாக மாற்றப்படுகிறது.

அது, காயங்களைக் குணப்படுத்தும் தன்மையைப் பெறுகின்றது.

எலியின் மீது சோதித்தபோது, மேம்படுத்தப்பட்ட புரதம் திசுக்களைக் குணப்படுத்த உதவியதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

மீன் செதில்களிலிருந்து புரதத்தைப் பிரித்து எடுக்கும் செலவு சுமார் 4 வெள்ளிதான்.


உங்கள் கருத்து

Top