Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சமூகத்தில் பின்தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க மார்சிலிங் வட்டாரத்தில் சமூகச் சேவை நடுவம்

வலுவான பங்காளித்துவத்தின் மூலம் சமூகத்தில் பின்தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவை அதிகரிக்க, மார்சிலிங் வட்டாரத்தில் ComLink சமூகச் சேவை நடுவம் திறக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

வலுவான பங்காளித்துவத்தின் மூலம் சமூகத்தில் பின்தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவை அதிகரிக்க, மார்சிலிங் வட்டாரத்தில் ComLink சமூகச் சேவை நடுவம் திறக்கப்பட்டுள்ளது.

அதை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.

வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஆதரவு அளிப்பதில் நடுவம் கவனம் செலுத்தும்.

பெற்றோருக்குப் பயிலரங்குகள் நடத்தவும், குழந்தைகளுக்கு வாசிக்கச் சொல்லிக்கொடுக்கவும் நடுவம் சிறந்த இடமாக விளங்கும். சமூகப் பங்காளித்துவ அமைப்புகள் அத்தகைய நடவடிக்கைகளை மார்சிலிங் Comlink நடுவத்தில் நடத்த வகைசெய்யப்படும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ComLink அறிமுகமானது.

ComLink சமூகச் சேவைத் திட்டத்தின் மூலம் சுமார் 250 குடும்பங்கள் பயன் பெற்றுவருகின்றன.

ஜாலான் குக்கோ, கெம்பாங்கான்- சாய் சீ, பூன் லே ஆகிய இடங்களில் உள்ளோருக்கும் சேவைகளை நீட்டிக்கவும் அது திட்டமிடுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்