Images
  • sg covid (33)
    (படம்: Calvin Oh)

Comcare திட்டத்தின்கீழ் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்குக் கடந்த ஆண்டு 236 மில்லியன் வெள்ளி நிதி உதவி

Comcare திட்டத்தின்கீழ் குறைந்த வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் முன்னெப்போதும் இல்லாத அளவாகக் கடந்த ஆண்டு 236 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டது.

2019ஆம் ஆண்டைக் காட்டிலும் அது 56 விழுக்காடு அதிகம்.

நோய்த்தொற்றுச் சூழல் அதற்கு முக்கியக் காரணம்.

உதவி பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கையும் 22 விழுக்காடு அதிகரித்தது.

96,000 பேர் கடந்த ஆண்டு திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.

கிட்டத்தட்ட 78 விழுக்காட்டுத் தொகை, குறுகியகால உதவியாக வழங்கப்பட்டது.

வேலை தேடிக்கொண்டிருப்போர் அல்லது குறுகிய காலத்திற்கு வேலை செய்ய முடியாதவர்களுக்கான உதவி அது.

அதன்மூலம் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 36,000 பேர் பயனடைந்தனர்.

2019ஆம் ஆண்டைக் காட்டிலும் அந்த எண்ணிக்கை 24 விழுக்காடு அதிகம்.

மேலும் 9,400 பேர் இடைக்கால உதவி பெற்றனர்.

அதன்முலம் உடனடி நிதியுதவி வழங்கப்படுகிறது.

2019ஐக் காட்டிலும் 20 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் கடந்த ஆண்டு அவ்வாறு உதவி பெற்றனர்.  

Top