Images
  • elderly
    (கோப்புப் படம்: Xabryna Kek)

ComCare நிதியுதவி - ஜூலையிலிருந்து அதிகரிப்பு


வரும் ஜூலை மாதம் முதல் தேதிலிருந்து ComCare சமூக ஆதரவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் செலவின ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தில் அவர் அதனை அறிவித்தார்.

ஒற்றை நபர் குடும்பங்கள் மாதந்தோறும் 600 வெள்ளி நிதியுதவி பெறுவர். தற்போது அவர்கள் பெறும் தொகையை விட அது 100 வெள்ளி அதிகம்.

அதிக நபர்களைக் கொண்ட குடும்பங்கள் அதிக நிதியுதவியைப் பெறுவர். உதாரணமாக, நான்கு பேர் கொண்ட குடும்பங்கள் மாதந்தோறும் 1,750 வெள்ளியைப் பெறுவர். தற்போது அவர்கள் மாதந்தோறும் 1,450 வெள்ளியைப் பெறுகின்றனர்.

புதிய மாற்றத்தால் 4,000 குடும்பங்கள் பயனடைவர். அவர்களில் பெரும்பாலோர் மூத்தோர்.

 

Top