Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ComCare திட்டத்தின்கீழ் உதவி நாடியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

தேவையுள்ள சிங்கப்பூரர்களுக்கான ComCare எனும் சமூக உதவித் திட்டத்தின்கீழ் உதவி நாடியவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு குறைந்துள்ளது.

வாசிப்புநேரம் -

தேவையுள்ள சிங்கப்பூரர்களுக்கான ComCare எனும் சமூக உதவித் திட்டத்தின்கீழ் உதவி நாடியவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு குறைந்துள்ளது.

இருப்பினும், உதவி நாடிய மூத்தோரின் எண்ணிக்கை கூடியுள்ளது.

மக்கள்தொகை மூப்படைந்து வருவது அதற்கு முக்கியக் காரணம்.

சென்ற நிதியாண்டில், 37,000 குடும்பங்களுக்கு 127 மில்லியன் வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது.

2017ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையைக் காட்டிலும் அது சற்றே குறைவு.

பொதுவாக 55இலிருந்து 64 வயதுக்கு உட்பட்டோர் தலைமையிலான குடும்பங்களுக்கு அதிக உதவி தேவைப்படுவது தெரியவந்தது.

குறுகிய, நடுத்தர காலத்துக்கு உதவி தேவைப்படும் சுமார் 27,000 குடும்பங்களில் அவர்களின் குடும்ப விகிதம் சுமார் 25 விழுக்காடு.

அறுபது வயதுக்கு முன்னும் பின்னும் உள்ளவர்களில் உதவி நாடுவோர், குடும்பச் செலவைச் சமாளிப்பதில் பிரச்சினை எதிர்நோக்குவது புள்ளிவிவரங்களில் தெரியவருவதாக சமூகவியல் வல்லுநர்கள் கூறினர்.

அவர்கள் தங்களுக்கு உரிய வேலையில் சேர்ந்து, ஓய்வுக் காலத்துக்குப் போதுமான அளவு சேமிப்பதை உறுதி செய்வது முக்கியம்.

இல்லாவிட்டால், அந்தப் பிரிவினர் நீண்ட காலத்துக்கு உதவி தேவைப்படும் பிரிவுக்குச் செல்லக்கூடுமென்பதை நிபுணர்கள் சுட்டினர்.

சென்ற ஆண்டு நீண்ட கால உதவியைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 4,200ஆகப் பதிவானது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்