Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ComfortDelGro ஓட்டுநரில்லாப் பேருந்து NUSஇல் சோதனை

ComfortDelGro-வின் ஓட்டுநரில்லா உள்சுற்றுப் பேருந்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கெண்ட் ரிட்ஜ் (Kent Ridge) வளாகத்தில் சோதனை செய்யப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -
ComfortDelGro ஓட்டுநரில்லாப் பேருந்து NUSஇல் சோதனை

படம்: சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ComfortDelGro-வின் ஓட்டுநரில்லா உள்சுற்றுப் பேருந்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கெண்ட் ரிட்ஜ் (Kent Ridge) வளாகத்தில் சோதனை செய்யப்படவுள்ளது.

முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் அந்தப் பேருந்தில் 12 பேர் பயணம் செய்ய முடியும்.

முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும் அது, வழியில் ஏற்படக்கூடிய தடங்கல்களைக் கண்டறிந்து தவிர்க்க உணர்கருவிகைளைக் கொண்டிருக்கும்.

சோதனை வரும் சனிக்கிழமை தொடங்கும்.

எனினும் பயணிகளுடன் கூடிய சோதனை இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் தான் தொடங்கும்.

சாலையில் சோதிக்கப்படும் முதல் ஒன்றரை மாதத்தில் அந்தப் பேருந்து ஹெங் முய் கெங் டெரஸூக்கும் (Heng Mui Keng Terrace) பிஸ்னஸ் லிங்க்கிற்கும் (Business Link) இடையிலான 1.6 கிலோமீட்டர் பாதையில் செல்லும்.

அதன் வேகம் மணிக்கு 5 முதல் 16 கிலோமீட்டர் வரை இருக்கும்.

சோதனைகளின்போது வாகனம் பாதுகாப்பாக இயங்குவதை உறுதிசெய்யவும் பயணிகளுக்குத் தகவல் வழங்கவும் பேருந்தில் ஊழியர் ஒருவர் இருப்பார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்