Images
  • ncid
    (படம்: AFP/Roslan Rahman)

சமூக அளவில் பாதிக்கப்பட்டவர் - தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் கிருமித்தொற்று அறிகுறிகளைத் தெரிவிக்கவில்லை

சமூக அளவில் நேற்று நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் தமக்கு ஏற்பட்ட கிருமித்தொற்று அறிகுறிகள் பற்றித் தெரிவிக்கவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவருடைய மனைவிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதால் அந்த, 43-வயது சிங்கப்பூர் ஆடவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிப்பந்தியான அவருடைய மனைவி ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து திரும்பியபோது நோய்வாய்ப்பட்டார்.

ஆடவர் இம்மாதத் தொடக்கத்திலிருந்து வேலையிடத்திற்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

9ஆம் தேதி: அவர் தனிமைப்படுத்தபட்டபோது செய்யப்பட்ட பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது.

15ஆம் தேதி : அவர் நுகரும் ஆற்றலை இழந்தபோது அதை அமைச்சிடம் தெரிவிக்கவில்லை.

20ஆம் தேதி: காய்ச்சல் ஏற்பட்டபோதும் அதை அவர் தெரிவிக்கவில்லை.

21ஆம் தேதி: வழக்கமான பரிசோதனையில் அவருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

அவருடைய மனைவியைப் போலவே ஆடவரிடமும் B117 ரக கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.

தனிமைப்படுத்தும் உத்தரவு, வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் இருக்கும் நபர்கள், தங்களுக்கு நோய் அறிகுறி தோன்றினால் உடனே அதைத் தெரிவிக்கவேண்டும் என்று அமைச்சு கூறியது.

நோய் அறிகுறிகளை விளக்கும் தகவல் குறிப்பு அவர்களுக்குக் கொடுக்கப்படுவதாய் தெரிவிக்கப்பட்டது.

இலேசான அறிகுறி தென்பட்டாலும், சமூகப் பொறுப்புடன், உடனே அது பற்றித் தெரிவிக்குமாறு அமைச்சு அறிவுறுத்தியது. 

Top