Images
  • heng
    படம்: MCI/ Chwee

பொதுச் சுகாதாரத் துறையில் சிங்கப்பூரும் சீனாவும் இன்னும் கூடுதலாக ஒத்துழைக்கவுள்ளன: துணைப் பிரதமர் ஹெங்

சிங்கப்பூரும் சீனாவும், பொதுச் சுகாதாரத் துறையில் இன்னும் கூடுதலாக ஒத்துழைக்கவிருப்பதாகத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் தெரிவித்துள்ளார்.

சீனத் துணைப் பிரதமர் ஹான் சாங்குடன் இன்று உரையாடிய பின்னர், தமது Facebook பதிவில் திரு. ஹெங் அவ்வாறு குறிப்பிட்டார்.


கடந்த பிப்ரவரியில் தாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட பிறகு, உலகச் சூழல் பெருமளவில் மாறியுள்ளதைத் திரு. ஹெங் சுட்டினார்.

COVID-19 நோய்ப்பரவலுக்கு இடையே, பாதுகாப்பான முறையில் சமூக, பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் இருநாடுகளும் அதிகச் சவால்களை எதிர்நோக்குகின்றன.

இருநாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, புதிய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இருதலைவர்களும் பேசினர்.

கலந்துரையடலில், பொதுச் சுகாதாரத் துறை முக்கிய இடம்பிடித்தது.

கொரோனா கிருமித்தொற்றுச் சோதனைகள்,தடுப்பூசி, சிகிச்சை போன்ற அம்சங்களை மேம்படுத்துவது பற்றிப் பேசப்பட்டது.

சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை உலக நாடுகள் அனைத்துடனும் பகிர்ந்துகொள்ளும் சீனாவின் முடிவுக்காகத் திரு. ஹெங், சீனத் துணைப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

பொருளியல் மீட்சியடைவதை உறுதிசெய்ய, தொடர் விநியோகம், நிதி, உள்கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் தொடர்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் இணக்கம் கண்டனர்.

 

Top