Images
  • mixed doubles
    (படம்: Sport Singapore)

காமன்வெல்த் போட்டி: மீண்டும் தங்கம் வென்றிருக்கும் சிங்கப்பூர் மேசைப்பந்து அணி

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மேசைப்பந்து கலப்பு இரட்டையர் பிரிவில், சிங்கப்பூர் தங்கம் வென்றுள்ளது. சிங்கப்பூர் அணியில், காவோ நிங், இயூ மெங்யூ ஆகிய இருவரும் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் இங்கிலாந்தின் லியம் பிச்ஃபோர்ட், ஹோ டின் டின் ஆகியோருடன் இறுதிச் சுற்று ஆட்டத்தில் பொருதினர்.

செட் விவரம்: 12-10, 12-10, 11-9

இவ்வாண்டு காமன்வெல்த் போட்டிகளில், சிங்கப்பூர் மேசைப் பந்து அணி பெற்றுள்ள இரண்டாவது தங்கப் பதக்கம் அது. முன்னதாக, அவர்கள் பெண்கள் இரட்டையர் பிரிவில், இந்திய அணியை வீழ்த்தினர்.

சிங்கப்பூர் அணி இதுவரை நான்கு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் எட்டு பதக்கங்களை வென்றுள்ளது.

இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில், பதக்க நிலவரம்

  • முதலிடம் - ஆஸ்திரேலியா - 78 தங்கம்
  • இரண்டாமிடம் - இங்கிலாந்து - 43 தங்கம்
  • மூன்றாமிடம் - இந்தியா - 26 தங்கம் 

உங்கள் கருத்து

Top