Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சமூக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சென்ற வாரம் அதிகரிப்பு - மருத்துவமனையில் 415 பேர்

சிங்கப்பூரில் சமூக அளவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சென்ற வாரம் 883க்குக் அதிகரித்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சமூக அளவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சென்ற வாரம் 883க்குக் அதிகரித்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கு முந்திய வாரம் அந்த எண்ணிக்கை 127ஆக இருந்தது.

சமூகத்தில் தொடர்பற்ற கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

சென்ற வாரம் - 105
அதற்கு முந்திய வாரம் - 16

தற்போது, 415 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட 7 பேருக்கு, உயிர்வாயுச் சிகிச்சை தேவைப்பட்டது.

ஒருவர், கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

அந்த 8 பேரில் எவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

கடுமையாக நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க, தடுப்பூசி உதவுகிறது என்பதற்கு, தொடர்ந்து சான்றுகள் கிடைத்து வருவதாக அமைச்சு தெரிவித்தது.

கடந்த 28 நாள்களில், உயிர்வாயுச் சிகிச்சை தேவைப்பட்டோர் அல்லது தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டோர் அல்லது மரணமடைந்தோர் எண்ணிக்கை 7.

அவர்களில் 6 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. எஞ்சிய ஒருவர், ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

ஜூலை 21 நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 6,911,740 முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

4,184,559 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை 2,847,397.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்