Images
  • bukit panjang transport hub
    (படம்: Google Maps)

சமூக அளவில் பாதிக்கப்பட்ட நால்வர் புக்கிட் பாஞ்சாங் ஒருங்கிணைந்த போக்குவரத்து நடுவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டவர்கள்

சமூக அளவில், நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர்; மூவர் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் மலேசியர்கள். நால்வருமே புக்கிட் பாஞ்சாங் ஒருங்கிணைந்த போக்குவரத்து நடுவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.

 நடுவத்தைச் சேர்ந்த நால்வருக்கு ஏற்கனவே கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு நடத்திய தீவிரப் பரிசோதனையில், நேற்று நால்வருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. அவர்களிடம் நோய்க்கான அறிகுறி ஏதும் இல்லை.

ரத்தப் பரிசோதனையில் அவர்களுக்கு முன்பே கிருமித்தொற்று இருந்ததாகவும், இப்போது பாதிப்பு இல்லை என்றும் உறுதியானது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவச் சோதனை நடத்த நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து செயல்படுவதாக அமைச்சு கூறியது.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய நால்வருக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதியானது. வேலை அனுமதி வைத்திருக்கும் அவர்களில் மூவர் இந்தியாவிலிருந்தும், ஒருவர் இந்தோனேசியாவிலிருந்தும் வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததிலிருந்தே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

Top