Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுப் போக்குவரத்து குறித்துப் பயணிகள் கூடுதல் திருப்தி

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து குறித்துப் பயணிகள் சென்ற ஆண்டு கூடுதல் திருப்தி தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
பொதுப் போக்குவரத்து குறித்துப் பயணிகள் கூடுதல் திருப்தி

படம்: Channel NewsAsia

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து குறித்துப் பயணிகள் சென்ற ஆண்டு கூடுதல் திருப்தி தெரிவித்துள்ளனர்.

ரயில் நம்பகத்தன்மை மேம்பட்டது அதற்குக் காரணம்.

பொதுப் போக்குவரத்து மன்றம் வெளியிட்ட வருடாந்தர பொதுப் போக்குவரத்துப் பயனீட்டாளர் திருப்தி குறித்த கருத்தாய்வில் அது தெரியவந்தது.

அந்தக் கருத்தாய்வு, சென்ற அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.

முன்னைய ஆண்டுடன் ஒப்புநோக்க, சென்ற ஆண்டு, பொதுப் போக்குவரத்து மீதான திருப்தி அளவு ஒட்டுமொத்த மேம்பாடு கண்டிருப்பதை அது காட்டுகிறது.

ரயில் சேவைகள் மீதான பயணிகளின் திருப்தி மேம்பட்டுள்ளது.

குறிப்பாக, ரயிலுக்குக் காத்திருக்கும் நேரம், நம்பகத்தன்மை போன்ற அம்சங்களில் அதிக முன்னேற்றம் காணப்பட்டது.

சேவைத் தாமதம் ஏற்பட்ட அடுத்தடுத்த சம்பவங்களுக்கு இடையில் ரயில்கள் பயணம் செய்த சராசரித் தொலைவு 2017ஆம் ஆண்டில் 181,000 கிலோமீட்டராகப் பதிவானது. கடந்த ஆண்டு அது 690,000 கிலோமீட்டராக இருந்தது.

நிலப் போக்குவரத்து ஆணையமும், பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும் இணைந்து கடந்த மூவாண்டாக மேற்கொண்ட முயற்சிகள் அதனைச் சாத்தியமாக்கின.

பயணிகளின் திருப்தி அளவீடு அதிகரித்ததற்கு, டௌன்டவுன் பாதையின் 3ஆம் கட்டச் சேவைகள் தொடங்கியதும் காரணமாகக் கருதப்படுகிறது.

பேருந்துச் சேவையைப் பொறுத்தவரை, காத்திருக்கும் நேரம், பயண நேரம், நம்பகத்தன்மை ஆகியவை தொடர்ந்து மேம்பட்டுள்ளன.

தனியார் நிறுவனமான Nexus Link, சென்ற ஆண்டு 5,000 பயணிகளிடம் கருத்தாய்வை நடத்தியது.

 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்