Images
  • Commuters' satisfaction

பொதுப்பேருந்து சேவைகளிலுள்ள மக்களின் திருப்தி அளவீடு குறைந்துள்ளது

சிங்கப்பூரில், சென்ற ஆண்டு, பொதுப் போக்குவரத்து மீதான பயணிகளின் திருப்தி அளவீடு, நான்காண்டில் முதல்முறையாகக் குறைந்துள்ளது.

ரயில் சேவைகள் மீதான திருப்தி அளவீடு குறைந்ததே அதற்கு முக்கியக் காரணம் என்று பொதுப் போக்குவரத்து மன்றத்தின் கருத்தாய்வில் தெரியவந்தது.

பொதுவாக சென்ற ஆண்டுக்கான பயணிகளின் திருப்தி அளவீடு 94.5 விழுக்காடு.

அதற்கு முந்தைய ஆண்டு அது 96.4 விழுக்காடாக இருந்தது.

ரயில் சேவைகள் மீதான திருப்தி அளவீடு, சென்ற ஆண்டு 92 விழுக்காட்டுக்கும் குறைவு.

2016இல் அது 96 விழுக்காடாக இருந்தது.

நம்பகத்தன்மை, காத்திருக்கும் நேரம், வசதி, பயண நேரம், சேவை பற்றிய தகவல் ஆகிய அம்சங்கள் குறித்த பயணிகளின் திருப்தி குறைந்தது.

பேருந்துச் சேவை குறித்த பயணிகளின் திருப்தி அளவீடு, மாற்றமில்லாமல், 96.7 விழுக்காடாகப் பதிவானது.

தொடர்ந்து 5ஆவது ஆண்டாகப் பேருந்துச் சேவை மீதான திருப்தி அளவீடு மேம்பட்டிருப்பதாக மன்றம் தெரிவித்தது.



 

Top