Images
  • crime (2)
    படம்: Channel NewsAsia 

நிறுவனம் தொடர்பான குற்றங்களுக்காக நிர்வாக இயக்குநருக்கு ஆகஅதிக அபராதம்

வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்


நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தின்கீழ் 54 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிர்வாக இயக்குநருக்கு 113,400 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் தொடர்பான குற்றங்களுக்காக ஒருவர்மீது பதிவான ஆகஅதிகக் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அது. ஆகஅதிக அபராதம் விதிக்கப்பட்டிருப்பதும் இது முதல்முறை.

வேண்டுமென்றே 9 நிறுவனங்களுடன் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடத்தத் தவறியதற்கும் ஆண்டு வருவாய் அறிக்கையைப் பதிவிடாததற்கும் காரணமாயிருந்த குற்றத்திற்காக டான் ஹாங் சொங்கின் மீது அக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

டான் குற்றங்களுக்கு மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இரண்டுநாள் நீதிமன்ற விசாரணையில் டான்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

அதனையடுத்து நேற்று டானுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நிறுவனங்களில் இயக்குநர் பொறுப்பை ஏற்பதற்கு எதிராக அவருக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

Top