Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நான்கு ஊழியர்களுக்குக் காயம் ஏற்படக் காரணமான நிறுவனத்திற்கு $200,000 அபராதம்

வேலைப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தை மீறியதற்காக Environmental Landscape நிறுவனத்திற்கு 220,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
நான்கு ஊழியர்களுக்குக் காயம் ஏற்படக் காரணமான நிறுவனத்திற்கு $200,000 அபராதம்

படம்: மனிதவள அமைச்சு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

வேலைப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தை மீறியதற்காக Environmental Landscape நிறுவனத்திற்கு 220,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

131 லோரோங் செமாங்க்காவில் அமைந்துள்ள நிலத்தடிச் சேமிப்புத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக அதற்குள் இறங்கியபோது நேர்ந்த மின்சார வெடிப்பால் நான்கு  ஊழியர்கள் தீக்காயத்துக்கு ஆளாயினர்.

சுமார் 3 மீட்டர் ஆழமுள்ள தொட்டிக்குள் ஏணியைப் பயன்படுத்தித்தான் இறங்க முடியும். அந்தத் தொட்டியின்மேலே, ஒரே ஒரு திறப்புதான் உண்டு. தொட்டிக்குள் இருட்டாக இருக்குமென்பதால், மேலிருந்து இந்திய ஊழியர் ஒருவர் ஏணியில் நின்று கொண்டிருந்த ஊழியர் உதினிடம் பிரகாசமான மின்விளக்கைக் கொடுத்தார்.

அந்த விளக்குக்கான மின் இணைப்பை, வேலையிட மேலாளர் ஹஸ்ஸான் தட்டியபோது தொட்டிக்குள் மின்பொறி உருவாகி வெடிப்பு நேர்ந்தது.

வெடிப்பின் கடுமையால், ஏணியில் நின்று கொண்டிருந்த ஊழியர் தொட்டிக்கு வெளியே, ஏணியோடு தூக்கி எறியப்பட்டார். சூட்டின் கடுமை தாங்காமல் அவர் அருகிலிருந்த குளத்துக்குள் குதித்தார். பின்னர் தொட்டிக்கு உள்ளே இருந்த ரஹ்மான், மியா-ஆகிய 2 ஊழியர்களும் மற்றவர்கள் உதவியோடு பாதுகாப்பாக வெளியேறினர்.

மேலே நின்று கொண்டிருந்த இந்திய ஊழியர் விக்னேஷுக்கு அதுதான் வேலையில், முதல்நாள்.

சிறிய இடத்தில் வேலை செய்வதற்குரிய சரியான பாதுகாப்பு விதிமுறைகளை நிறுவனம் பின்பற்றத் தவறியதாகவும், மூடிய தொட்டிக்குள் நச்சு வாயுக்கள் உருவாகிச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை அடையாளம் காணத் தவறியதற்கும், நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

காயம் அடைந்த மூவருக்கும் நெருக்கமான இடத்தில் பணிபுரிய பயிற்சி வழங்கப்படவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது. ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறிய மேலாளர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

வேலைப் பாதுகாப்பு, சுகாதாரத்தை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலையிட, சுகாதாரப் பாதுகாப்பு ஆணையம் நினைவூட்டியது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்