Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊழியர் கீழே விழுந்த சம்பவம் - நிறுவனத்திற்கு $210,000 அபராதம்

வேலையிட விபத்தில் ஊழியர் ஒருவர் 5 மீட்டருக்கு மேற்பட்ட உயரத்திலிருந்து விழுந்ததில் அவருக்கு நிரந்தர உடற்குறை ஏற்பட்டது.

வாசிப்புநேரம் -
ஊழியர் கீழே விழுந்த சம்பவம் - நிறுவனத்திற்கு $210,000 அபராதம்

படம்: மனிதவள அமைச்சு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

வேலையிட விபத்தில் ஊழியர் ஒருவர் 5 மீட்டருக்கு மேற்பட்ட உயரத்திலிருந்து விழுந்ததில் அவருக்கு நிரந்தர உடற்குறை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து AVA Global நிறுவனத்திற்கு 210,000 வெள்ளி அபராதமும் அந்த நிறுவனத்தின் மேலதிகாரிக்குச் சிறையும் விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியதற்காக அந்நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. கவனக்குறைவாய் நடந்துகொண்டதற்காக மேலதிகாரி சர்கார் மித்துனுக்கு ஒன்பது வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தச் சம்பவம் 2016ஆம் ஆண்டு செம்படம்பர் 14ஆம் தேதி நடந்தது.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் உட்கூரைத் தகடுகளைப் பொருத்தும் பணியை மேற்பார்வை செய்தார் சர்கார்.

ஆனால் AVA Global நிறுவனம் அதன் தொடர்பில் குறிப்புகள் எதனையும் வழங்கவில்லை.

மினா ஜோபயிட் மின்தூக்கியைப் பயன்படுத்தி உட்கூரைக்குச் சென்றார். உட்கூரைத் தகட்டுக்கு மேலே இருந்த எஃகுக் கட்டுமானத்தில் எந்தப் பாதுகாப்புமின்றி அவர் நின்றார்.

அப்போது அவர் 5.5மீட்டர் கீழே விழுந்தார்.

தற்போது அவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்