Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செங்காங்கின் Compass One கடைத்தொகுதியில் பயங்கரவாத எதிர்ப்புப் பாவனைப் பயிற்சி

Sengkang குடியிருப்பாளர்கள் பீதியடைய வேண்டாம்!

வாசிப்புநேரம் -
செங்காங்கின் Compass One கடைத்தொகுதியில் பயங்கரவாத எதிர்ப்புப் பாவனைப் பயிற்சி

(படம்: Mindef)

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை நாளை மறுநாள் Compass One கடைத்தொகுதியில் பயங்கரவாத எதிர்ப்புப் பாவனைப் பயிற்சியை நடத்தவுள்ளது.

அந்தப் பயிற்சி நாளை பின்னிரவு 12.30 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நிறைவுறும்.

பயிற்சியை முன்னிட்டு செங்காங் ஈஸ்ட் வே (Sengkang East Way) சாலையில் இரண்டு தடங்கள் போக்குவரத்துக்கு மூடப்படும்.

பாவனைப் பயிற்சியில் பங்குபெறும் அவசரகால வாகனங்கள் செல்ல வகைசெய்வது நோக்கம்.

பீதியடைய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்