Images
  • Compliant PMD
    (படம்: Jeremy Long/ CNA)

சட்ட விதிமுறைகளுக்கு உட்படாத தனி நபர் நடமாட்டச் சாதனங்களைக் காட்சிக்கு வைத்த நிறுவனத்துக்கு அபராதம்


சட்ட விதிமுறைகளுக்கு உட்படாத தனி நபர் நடமாட்டச் சாதனங்களைக் காட்சிக்கு வைத்த நிறுவனத்துக்கு 750 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள்கள், தனி நபர் நடமாட்டச் சாதனங்கள் போன்றவற்றுக்கான சட்டத்தின் கீழ் விற்பனையாளர் தண்டிக்கப்பட்டுள்ள முதல் சம்பவம் இது.

Ning Pte Ltd எனும் அந்த நிறுவனம் பயா லேபரிலுள்ள அதன் கடைக்கு வெளியே 5 சாதனங்களைக் காட்சிக்கு வைத்திருந்தது.

அவற்றில் மூன்று சட்ட விதிமுறைகளுக்கு உட்படாதவை.

நீதிமன்ற விசாரணையில் நிறுவனத்தைப் பிரதிநிதித்த அதன் மேலாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சட்ட விதிமுறைகளுக்கு உட்படாத தனி நபர் நடமாட்ட சாதனங்களைக் காட்சிக்கு வைத்ததற்காக அதிகபட்ச தண்டனையாக மூன்று மாத சிறைத் தண்டனையும் 1,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.  

Top