Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தரைவழிப் பயண ஏற்பாடு - மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தவுடன் பயணிகளுக்கு ART பரிசோதனை கட்டாயம்

சிறப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் தரைவழி மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வருவோர் இங்கு வந்ததும் ART பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது கட்டாயம் என்று வர்த்தக, தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிறப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் தரைவழி மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வருவோர் இங்கு வந்ததும் ART பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது கட்டாயம் என்று வர்த்தக, தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

COVID-19 புதிய வகைக் கிருமி கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருப்பதால் அத்தகைய நடைமுறை அவசியம் என்று அமைச்சு சொன்னது.

சிங்கப்பூர் - மலேசியா இடையிலான சிறப்புப் பயண ஏற்பாடு நாளை (29 நவம்பர்) தொடங்குகிறது.

காலை 8 மணியிலிருந்து ART பரிசோதனை நடைமுறை தொடங்கும்.

உட்லண்ட்ஸ் தற்காலிகப் பேருந்து முனையத்திலும் குவீன் ஸ்ட்ரீட் (Queen Street) பேருந்து முனையத்திலும் பயணிகளுக்கு ART பரிசோதனை நடத்தப்படும்.

அதற்காகப் பயணிகள் ART சோதனை நிலையங்களில் மின்னியல் முறையில் கட்டணம் செலுத்த வேண்டும்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்