Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு மாதத்தில் ஒரு நாளாவது கட்டாய விடுப்பு: மனிதவள அமைச்சு

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு, மாதத்தில் ஒரு நாளாவது கட்டாய விடுப்பு வழங்கப்படவேண்டும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு, மாதத்தில் ஒரு நாளாவது கட்டாய விடுப்பு வழங்கப்படவேண்டும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த விடுப்பு நாளுக்குப் பதிலாகச் சம்பளம் வழங்கமுடியாது என்றும் அது குறிப்பிட்டது.

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் நலனை மேம்படுத்தி, அவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவை வலுப்படுத்த அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதன் மூலம், பணிப்பெண்கள், வீட்டுக்கு வெளியே ஆதரவு பெற வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை அமைச்சு குறிப்பிட்டது.

மேலும் வேலையிலிருந்து அவர்களுக்குச் சற்று ஓய்வு கிடைக்கும் என்பதையும் அமைச்சு சுட்டியது.

புதிய விதிமுறை, அடுத்த ஆண்டு இறுதியில் நடப்புக்கு வரும்.

புதிய ஏற்பாடுகளுக்கு மாறிக்கொள்ள சில முதலாளிகளுக்கு அவகாசம் தேவைப்படலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடிவதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்