Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தண்ணீர்க் குழாயைச் சேதப்படுத்திய நிறுவனத்திற்கு $42,000 அபராதம்

River Valley Green கட்டுமானத் தளத்தில் தண்ணீர்க் குழாயைச் சேதப்படுத்திய Dae Sung Construction நிறுவனத்திற்கு 42,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
தண்ணீர்க் குழாயைச் சேதப்படுத்திய நிறுவனத்திற்கு $42,000 அபராதம்

(படம்: PUB)


River Valley Green கட்டுமானத் தளத்தில் தண்ணீர்க் குழாயைச் சேதப்படுத்திய Dae Sung Construction நிறுவனத்திற்கு 42,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 2ஆம் தேதி அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.

துளையிடும் பணியின்போது தண்ணீர்க் குழாய் சேதமடைந்தது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அந்தச் சம்பவம் நடந்தது.

தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் பாதை, கிரேட் வோர்ல்ட் (Great World) ரயில் நிலையம் ஆகியவற்றுக்கான மண்ணைத் தரமாக்கும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டிருந்தது.

தண்ணீர்க் குழாய் சேதமடைந்ததால் ஒன்றரை மில்லியன் லிட்டர் குடிநீர் வீணாக்கப்பட்டது. அது அரை ஒலிம்பிக் நீச்சல் குளத்தை நிரப்பும் நீருக்குச் சமம்.

பொதுவாக, இதுபோன்ற குற்றங்களுக்கு 200,000 வெள்ளி வரை அபராதமோ மூவாண்டு சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்பட்டலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்