Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கட்டுமானத் துறைக்கான பாதுகாப்பு முறைகளைக் கற்றுத்தரும் பள்ளி திறப்பு

கட்டுமானத் துறைக்கான பாதுகாப்பு முறைகளைக் கற்றுத் தரும் பள்ளி ஒன்று அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -

கட்டுமானத் துறைக்கான பாதுகாப்பு முறைகளைக் கற்றுத் தரும் பள்ளி ஒன்று அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது.

கட்டுமானப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்துவதும், கட்டுமான ஊழியர்களுக்குத் தகுந்த பயிற்சிகளை வழங்குவதும் பள்ளியின் நோக்கம்.

வேலையிடத்தில் காயமுற்றோரின் எண்ணிக்கை சென்ற ஆண்டு சுமார் 12,800 ஆகப் பதிவானது.

ஒப்புநோக்க, 2017இல் அந்த எண்ணிக்கை சுமார் 12,500ஆக இருந்தது.

சென்ற ஆண்டு நேர்ந்த வேலையிட விபத்துகள் 41இல், ஊழியர்கள் மரணமடைய நேரிட்டது.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை வேலையிட விபத்துகளால் 11 பேர் மாண்டுவிட்டனர். அவர்களில் கட்டுமானத் துறை ஊழியர்கள் 6 பேர்.

இவற்றைக் கருத்திற்கொண்டு பள்ளி திறக்கப்படுகிறது.

1,200 சதுர அடி பரப்பளவைக் கொண்ட பள்ளி JTCSpace@Gul பகுதியில் அமைந்துள்ளது.

பாவனை அடிப்படையில் ஊழியர்களுக்குப் பாடங்கள் நடத்தப்படும்.

மெய்நிகர் தொழில்நுடபம், மிகை மெய்நிகர் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் பாடங்களில் பயன்படுத்தப்படும்.

கட்டடத்தை உருவாக்குவதற்கான செலவு 2.2 மில்லியன் வெள்ளி.

JTC அமைப்பின் முயற்சியான இதைக் கட்டி இயக்கும் பொறுப்பு சிங்கப்பூர் கட்டுமானத் துறை ஊழியர் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.

பள்ளியில் வகுப்புகள் அடுத்த மாதம் முதல் கட்டங்கட்டமாக தொடங்கப்படும்.

பாடங்கள் தற்போதைக்கு ஆங்கிலத்தில் நடத்தப்படும்.

வருங்காலத்தில் மாண்டரின், மலாய், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் பாடங்களை நடத்தத் திட்டங்கள் உள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்