Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத் துறைக்கான முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களால், கட்டுமானத்துறை இவ்வாண்டு மிதமான மீட்சி காணும்

சிங்கப்பூரின் கட்டுமானத்துறை, இவ்வாண்டில் மிதமான மீட்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
பொதுத் துறைக்கான முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களால், கட்டுமானத்துறை இவ்வாண்டு மிதமான மீட்சி காணும்

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரின் கட்டுமானத்துறை, இவ்வாண்டில் மிதமான மீட்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத் துறைக்கான முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள், அதற்கு உதவியாக அமையும் எனக் கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்தது.

இவ்வாண்டு வழங்கப்படும் கட்டுமானக் குத்தகைகளின் மதிப்பு:

  • 23-28 பில்லியன் வெள்ளி

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை:

  • சுமார் 21.3 பில்லியன் வெள்ளி

இவ்வாண்டின் கட்டுமானத் தேவை:

  • அரசாங்கத் திட்டங்களிலிருந்து சுமார் 65%
  • அவற்றின் மதிப்பு சுமார்15-18 பில்லியன் வெள்ளி
  • கடந்த ஆண்டுத் திட்டங்களின் மதிப்பு சுமார் 13.2 பில்லியன் வெள்ளி

முக்கியப் பொதுக் குடியிருப்பு, உள்கட்டமைப்புத் திட்டங்களால், கட்டுமானத்துக்கான தேவை இவ்வாண்டு அதிகரிக்கும் என்றார் சொத்துச் சந்தை வாய்ப்புகள் பற்றிய மாநாட்டில் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee).

ஜூரோங் ஈஸ்ட்டில் (Jurong East) அமையவுள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து நடுவம், ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்குத் தீவு ரயில் பாதை போன்றவை அதில் அடங்கும். சைக்கிளோட்டப் பாதைகள், மறுசீரமைப்புப் பணிகள் போன்ற சிறிய அளவிலான திட்டங்களுக்குச் சுமார் 6 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும் என்றும் திரு. லீ சொன்னார்.

அவை நோய்ப்பரவலுக்கு முந்திய காலத்தில் வழங்கப்பட்ட குத்தகைகளுக்கு ஈடானவை என்றார் அவர். அதன்மூலம், சிறிய-நடுத்தரக் கட்டுமானக் குத்தகையாளர்கள் பயனடைவர் என, தேசிய வளர்ச்சி அமைச்சர் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்