Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலவ ஆக்கபூர்வமான கலந்துரையாடல் அவசியம்: பிரதமர் லீ

கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலவ வேண்டுமென்றால் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் அவசியம் எனப் பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலவ ஆக்கபூர்வமான கலந்துரையாடல் அவசியம்: பிரதமர் லீ

படம்: TODAY / Jason Quah

கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலவ வேண்டுமென்றால் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் அவசியம் எனப் பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

டிரம்ப்-கிம் சந்திப்பை ஏற்றி நடத்தியதில் சிங்கப்பூர் பெருமிதம் கொள்வதாகக் கூறிய திரு. லீ அதில் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பு சாத்தியமானதில் தென்கொரியா ஆற்றிய பங்கையும் அதிபர் மூன் ஜே இன்னின் தனிப்பட்ட முயற்சியையும் திரு. லீ பாராட்டினார்.

தென்கொரிய அதிபரின் சிங்கப்பூர்ப் பயணத்தையொட்டித் திரு. லீ உரையாற்றினார்.

கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலவவும், வடகொரியாவின் அணுவாயுதக் களைவுக்கு வழிவகுக்கவும், சிங்கப்பூர், தென்கொரியாவுடனும் அனைத்துலகச் சமூகத்துடனும் இணைந்து தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்று திரு. லீ கூறினார்.

தென்கொரியாவுடனான வர்த்தகப் பிணைப்பு வலுவாக இருப்பதாகவும், மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 45 பில்லியன் வெள்ளியை எட்டுவதாகவும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடியதாகவும் தென்கொரியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தடையற்ற வர்த்தகத்தை மேம்படுத்துவதில் உறுதியாக இருப்பதை அது காட்டுவதாகவும் கூறினார் திரு. லீ.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்