Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோரை அடையாளம் காணும் குழுக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோரை அடையாளம் காணும் குழுக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன

வாசிப்புநேரம் -
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோரை அடையாளம் காணும் குழுக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன

(படம்: CNA)

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோரை அடையாளம்காணும் குழுக்கள் 20ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அது ஏற்கனவே மூன்றாக இருந்தது.

அதன் மூலம் ஒரு நாளில் 4,000 பேர் வரை அடையாளம்காணப்பட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால் குழுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்படும்.

புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை வரும் வாரங்களில் அதிகரிக்கலாம் என்பதால் அதற்குத் தயராக, குழுக்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நாடாளுமன்றத்தில் அந்த விவரங்களைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சென்ற ஒரு வாரத்தில் இருமடங்காகியுள்ளது. புதிய சம்பவங்களில் சுமார் 80 விழுக்காடு வெளிநாடுகளிலிருந்து வந்தோருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றால் பதிவானவை.

அதில் பிரிட்டன், அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய 3 நாடுகளும் முக்கிய இடம் வகித்தன.

வெளிநாடுகளிலிருந்து சுமார் 200,000 சிங்கப்பூரர்கள் நாடு திரும்பவேண்டியுள்ளதால், வரும் வாரங்களில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று திரு கான் சொன்னார்.

இருப்பினும், பரவுவதைக் கட்டுப்படுத்தினால், நெருங்கிய தொடர்புகளைக் கண்டுபிடித்துத் தனிமைப்படுத்தி, சமூகத்தில் பரவுவதைத் தடுக்க முடியும் என்றார் அவர்.

மேலும் மோசமான பாதிப்புக்குள்ளானோரைக் கவனிப்பதில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் கவனம் செலுத்த முடியும் என்றும் திரு கான் கூறினார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்