Images
  • submit sign
    படம்: AFP

டிரம்ப் - கிம் கையெழுத்திட்ட ஆவணத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது?

கொரியத் தீபகற்பத்தில் முழுமையான அணுவாயுதக் களைவை நிறைவேற்றுவதில் கடப்பாடு கொண்டிருப்பதை வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உறுதிப்படுத்தினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இன்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் திரு கிம்மும் சந்தித்தனர்.

அதன் நிறைவில் இருவரும் கையெழுத்திட்ட கூட்டு ஆவணத்தில் அணுவாயுதக் களைவு குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்க-வடகொரிய உறவு, கொரியத் தீபகற்பத்தில் நீடித்த அமைதி போன்றவை குறித்து இருவரும் விரிவான, நேர்மையான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

வடகொரியாவுக்குப் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவதற்கு அதிபர் டிரம்ப் கடப்பாடு தெரிவித்தார்.

கொரியத் தீபகற்பத்தின் அமைதிக்கும் செழிப்புக்கும் இரு நாடுகளுக்கு இடையிலான புதிய உறவு கைகொடுக்கும் எனத் திரு. டிரம்ப்பும் திரு.கிம்மும் நம்பிக்கை தெரிவித்தனர்.

இருநாடும் அதற்காக அவற்றின் முயற்சிகளை ஒன்றிணைக்கும் என ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பல ஆண்டுகால பதற்றத்தையும் பகைமையையும் மறந்து இரு நாடுகளும் புதியதோர் எதிர்காலத்துக்காகச் சந்தித்துப் பேசியதை வரலாற்றுச் சிறப்புமிக்கது என ஆவணத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
முதல் சந்திப்பைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பெயோ விரைவில் வழிநடத்தவுள்ள சந்திப்புகளில் இருதரப்பும் கலந்துகொள்ளும் எனக் கடப்பாடு தெரிவிக்கப்பட்டது. 

உங்கள் கருத்து

Top