Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

துவாஸில் விளையாட்டு இயந்திரங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட தீர்வை செலுத்தப்படாத 6,000 சிகரெட் பெட்டிகள்

துவாஸ் அவென்யூ 3ல் அமைந்துள்ள கிடங்கு ஒன்றிலிருந்து 6,000 தீர்வை செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகளைக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
துவாஸில் விளையாட்டு இயந்திரங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட தீர்வை செலுத்தப்படாத 6,000 சிகரெட் பெட்டிகள்

(படம்: Immigration & Checkpoints Authority)

துவாஸ் அவென்யூ 3ல் அமைந்துள்ள கிடங்கு ஒன்றிலிருந்து 6,000 தீர்வை செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகளைக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

அவை, கிடங்கில் இருந்த விளையாட்டு இயந்திரங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

விளையாட்டு இயந்திரங்கள் இருப்பதாகக் கொள்கலன் ஒன்றில் கூறப்பட்டது. ஆனால் அதைச் சோதித்த போது, முரண்பாடுகள் தென்பட்டன.

சம்பவம் திங்கட்கிழமை அன்று பிற்பகல் 1.30 மணியளவில் நடந்தது. கொள்கலனை அதிகாரிகள் மேலும் சோதனை செய்தனர்.

விளையாட்டு இயந்திரங்கள் பூட்டப்பட்டிருந்தது சோதனைகளில் தெரியவந்தது.

இயந்திரங்களை உடைத்துப் பார்த்த அதிகாரிகள், அவற்றிலிருந்த தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கைப்பற்றினர்.

அவற்றுக்கு செலுத்தப்படவேண்டிய தீர்வை சுமார் 550,000 வெள்ளியாக மதிப்பீடு செய்யப்பட்டது.

சிங்கப்பூர் சுங்கத்துறை மேலும் விசாரணைகளை மேற்கொள்ளும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்