Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குத்தகையாளரின் அபராதம் 330,000 வெள்ளிக்கு அதிகரிப்பு

ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியதற்காக எஃகுப் பொருள் உற்பத்தி செய்யும் Sterling Engineering நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
குத்தகையாளரின் அபராதம் 330,000 வெள்ளிக்கு அதிகரிப்பு

படம்: மனிதவள அமைச்சு

ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியதற்காக எஃகுப் பொருள் உற்பத்தி செய்யும் Sterling Engineering நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பார்ட்லி ரோட்டிலுள்ள கட்டுமானத் தளத்தில் எஃகுக் கதவை 5 ஊழியர்கள் பொருத்த முயன்றபோது, அது ஓர் ஊழியரின் மீது விழுந்தது. அந்தச் சம்பவம் 2014ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்தது.

அபராதத்தைத் தொடர்ந்து நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. வழக்கு தோல்வியில் முடிந்தது. அரசாங்கத் தரப்பு அபராதத்தை அதிகரிக்க மேல்முறையீடு செய்திருந்தது.

அதன் அடிப்படையில் குத்தகையாளருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 280,000 வெள்ளி அபராதம் 330,000 வெள்ளிக்கு உயர்ந்தப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு இன்று (ஏப்ரல் 17) தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்