Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போலியான $100, $50 பண நோட்டுகளை எப்படிக் கண்டுபிடிக்கலாம் ?

போலியான பணநோட்டுகளைக் கண்டறிய சில வழிகள்...

வாசிப்புநேரம் -
போலியான $100, $50 பண நோட்டுகளை எப்படிக் கண்டுபிடிக்கலாம் ?

படம்: MAS


போலியான $100, $50 பண நோட்டுகள் குறித்துக் காவல்துறை அண்மையில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

உணவங்காடிகள், கடைகள், சில்லறை வர்த்தகக் கடைகளில், போலியான பண நோட்டுகள் புழங்குவது குறித்துப் புகார்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

போலியான பணநோட்டுகளைக் கண்டறிய சில வழிகள்...

1. தெளிவான படங்கள்

2. தொட்டு உணர்தல்:

பண நோட்டின் மேல் வலது மூலையில் உள்ள பிரெயில் குறியீடுகளை எளிதில் தொட்டு உணரலாம். பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான அந்தக் குறியீடுகளைத் தொட்டுப் பார்த்து வித்தியாசத்தை எளிதில் உணரமுடியும்.

3. திருத்தமான சிங்கச் சின்னம் :

பண நோட்டில் உள்ள சிங்கத்தின் சின்னம் நோட்டின் முன், பின் பகுதிகளில் திருத்தமாக அச்சிடப்பட்டிருக்கும். பண நோட்டை விளக்கிற்கு நேரே வைத்துப் பார்த்தால், முன்னாலுள்ள சிங்கத்தின் படம் பின்னாலுள்ள படத்தோடு கச்சிதமாகப் பொருந்தும். பிசிறு ஏதும் இருக்காது. போலியான பண நோட்டில் சிங்கத்தின் படம் ஒன்றோடு ஒன்று பொருந்தாது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்