Images
  • couple arrested (1)
    (படம்: Jeremy Long)

பூகிஸ் ஜங்ஷனில் உள்ள கடையில் தங்கக் கட்டியைத் திருடிய தம்பதி கைது

பூகிஸ் ஜங்ஷனில் உள்ள ஒரு கடையிலிருந்து தங்கக் கட்டியைத் திருடிய சந்தேகத்தின் பேரில் தம்பதி இன்று (டிசம்பர் 8) கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் கூறினர்.

200 விக்டோரியா ஸ்ட்ரீட்டில் (Victoria Street) அமைந்திருக்கும் அந்தக் கடையில் திருடு போனது பற்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல் துறை கூறியது.

அதனைத் தொடர்ந்து, கண்காணிப்புக் கேமராவின் உதவியுடன் விசாரணை நடத்திய அதிகாரிகள் 36 வயது ஆடவரையும், 39 வயதுப் பெண்ணையும் இன்று கைது செய்தனர்.

திருடப்பட்ட தங்கக் கட்டி மீட்கப்பட்டது.

குற்றம் நிரூபணமானால், அவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

 

Top