Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: விமானம், சுற்றுலா போன்ற துறைகளுக்கு 1 பில்லியன் வெள்ளிக்கும் கூடுதலான நிதி

COVID-19 கிருமித்தொற்றால் ஏற்பட்ட தாக்கத்தைச் சமாளிக்க இன்று இரண்டாவது நிதியுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
COVID-19: விமானம், சுற்றுலா போன்ற துறைகளுக்கு 1 பில்லியன் வெள்ளிக்கும் கூடுதலான நிதி

(படம்: AFP/Roslan Rahman)

COVID-19 கிருமித்தொற்றால் ஏற்பட்ட தாக்கத்தைச் சமாளிக்க இன்று இரண்டாவது நிதியுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு 1 பில்லியன் வெள்ளிக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது.

குறிப்பாக, விமானத் துறைக்கு 750 மில்லியன் வெள்ளிக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறினார்.

COVID-19 கிருமித்தொற்றால் உலகின் விமானம், சுற்றுலாத் துறைகள் எண்ணிப்பார்க்காத முடியாத பேரதிர்ச்சியைச் சந்தித்ததாக திரு.ஹெங் தெரிவித்தார்.

சாங்கி விமான நிலையம் சிங்கப்பூர்ப் பொருளியலுக்கு முக்கியமான தூணாக விளங்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அது ஐந்து விழுக்காட்டுக்கும் அதிகமாகப் பங்களித்து, சுமார் 192,000 பேருக்கு வேலையைத் தந்துள்ளதாகத் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்