Images
  • covid 19h
    (படம்:Marcus Mark Ramos) 

ஜூன் 14ஆம் தேதியிலிருந்து 5 பேர்வரை ஒன்றுகூட அனுமதி

சிங்கப்பூரில் நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள், வரும் 14ஆம் தேதி (ஜூன் 14) தளர்த்தப்படவிருப்பதாக அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு அறிவித்துள்ளது.

உயர்த்தப்பட்ட விழிப்புநிலையைக் கொண்ட மூன்றாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடப்புக்கு வரும்.

பொது இடங்களில் தற்போது இருவர் மட்டும் ஒன்றுகூட அனுமதிக்கப்படுகிறது.

திங்கட்கிழமையிலிருந்து ஐந்துபேர் வரை ஒன்றுகூட அனுமதிக்கப்படும்.

மேலும், ஒரு வீட்டிற்கு ஐந்து விருந்தினர் வரை சென்றுவர அனுமதிக்கப்படும் என்று பணிக்குழு தெரிவித்தது.

எனினும், கிருமிப்பரவலைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க ஒரு நாளில் இரண்டு முறைக்கு மேல் அவ்வாறு ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவேண்டும்.

பொழுதுபோக்கு இடங்கள், சொகுசுக் கப்பல்கள், அருங்காட்சியகங்கள், பொது நூலகங்கள் ஆகியவை 50 விழுக்காட்டு இயக்கநிலையுடன் மீண்டும் செயல்படலாம்.

அவை தற்போது 25 விழுக்காடு மட்டுமே இயங்குகின்றன.  

Top