Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீட்டிலிருந்து குணமடையும் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளும் சேர்த்துக்கொள்ளப்படுவர்

சிங்கப்பூரில் வீட்டிலிருந்து குணமடையும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.

வாசிப்புநேரம் -
வீட்டிலிருந்து குணமடையும் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளும் சேர்த்துக்கொள்ளப்படுவர்

(படம்:Pixabay)

சிங்கப்பூரில் வீட்டிலிருந்து குணமடையும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.

35 வயதுக்குக் கீழ் உள்ள, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், அவர்கள் வீட்டில் இருந்தவாறு குணமடையலாம்.

அவர்கள் கருவுற்று 26 வாரங்களுக்குக் குறைவாக இருந்தால் அது பொருந்தும்.

முதலில், குறிப்பிட்ட மருத்துவமனைகளில் அவர்கள் பரிசோதிக்கப்படுவர். பரிசோதனையின் மூலம், அவர்கள் வீட்டில் இருந்தவாறு குணமடையலாமா என்பது மதிப்பிடப்படும்.

இந்நிலையில், வீட்டிலிருந்தபடி குணமடையும் பெரும்பாலானவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. அதை ஈடுகட்ட, தனியார் மருந்தகங்களில் பணிபுரியும் மேலும் அதிகமான மருத்துவர்கள் தொலைத்தொடர்பு மருத்துவச் சேவைகளை வழங்குவர்.

தனியார் மருத்துவமனைகளும் அவற்றின் படுக்கை வசதிகளை விரிவுபடுத்தி, COVID-19 தொற்றியவர்கள், தொற்றாதவர்கள் என இருதரப்பினரின் தேவைகளையும் சமாளிக்கத் தயாராகவிருக்கின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்