Images
  • sg hospital
    (கோப்புப் படம்: CNA)

சிங்கப்பூரில் COVID-19 சிகிச்சை பெறுவோர், உயிர்வாயு தேவைப்படுவோர் - விவரங்கள்

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுக்காக மருத்துவமனைகளில் தற்போது 379 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது என்றும் அவர்களில் பெரும்பாலானோரின் நிலை சீராக உள்ளது என்றும் சுகாதார அமைச்சு கூறியது.

தற்சமயம் 7 பேருக்கு நோயின் கடுமை காரணமாக உயிர்வாயு அளிக்கப்படுகிறது.

ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

அந்த 8 பேரில் யாரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்கள் அல்லர்.

60 வயதைத் தாண்டிய மூத்தோர் இருவருக்கு நோயால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்குத் தடுப்பூசி போடப்படவில்லை, மற்றவருக்கு ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  

Top