Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்; புதிதாக ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -


சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 53 பேர் குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்னும் 37 பேர் மருத்துவமனையில் உள்ளனர். அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

சுகாதார அமைச்சு அந்தத் தகவல்களை வெளியிட்டது.

இந்நிலையில், புதிதாக ஒருவருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரையும் சேர்த்து கிருமியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 90 ஆனது.

புதிதாக பாதிக்கப்பட்டவர் Bishan street 12 இல் வசிக்கும் 75 வயது சிங்கப்பூர்ப் பெண். அவர் அண்மையில் சீனா செல்லவில்லை.

The Life Church and Mission Singapore தேவாலயத்துடன் அவர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார்.

தற்போது அவர் தேசிய தொற்றுநோய் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்