Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

4 கோவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் இம்மாதம் திறக்கப்படும்; இதுவரை 6,200 தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சர்

சிங்கப்பூரில் இம்மாதம் 4 கோவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -
4 கோவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் இம்மாதம் திறக்கப்படும்; இதுவரை 6,200 தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சர்

(படம்: MOH)

சிங்கப்பூரில் இம்மாதம் 4 கோவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

சாங்கி விமான நிலையத்தின் 4ஆம் முனையம், Raffles City மாநாட்டு நிலையம் ஆகியவற்றில் இரண்டு தடுப்பூசி நிலையங்கள் இன்று செயல்படத் தொடங்கின.

மேலும் இரண்டு நிலையங்கள் ஹோங் கா உயர்நிலைப் பள்ளி, உட்லண்ட்ஸ் Galaxy சமூக நிலையம் ஆகியவற்றில் அடுத்த வாரம் செயல்படத் தொடங்கும்.

அடுத்த மாதத்தின் இறுதிக்குள் மேலும் 4 தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்படும் என்று திரு கான் கூறினார்.

இந்த நிலையங்கள் பலதுறை மருந்தகங்கள், பொது சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து
ஒவ்வொரு சிங்கப்பூரரும் நீண்டகாலக் குடியிருப்பாளரும் வசதியாகத் தடுப்பூசி பெறுவதை உறுதிப்படுத்தும்.

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் முன்னிலை ஊழியர்களுக்கும்
தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கிவிட்டது.

விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கும் தடுப்பூசி
போடப்படுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நேற்றைய (ஜனவரி 12) நிலவரப்படி சுமார் 6,200 பேருக்கு முதல் ஊசி போடப்பட்டதாகக் கூறப்பட்டது. நேற்று மட்டுமே 2,500 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் உட்பட 2,800 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

அடுத்து வரும் நாள்களில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அமைச்சு கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்