Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 கிருமித்தொற்று உறுதியாகும் முன் நோயாளிகள் பல முறை மருத்துவரிடம் செல்கின்றனர். ஏன்?

சில நோயாளிகளிடம் நோய் இருப்பது உடனடியாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. வேறு சிலரோ பல முறை மருத்துவரிடம் சென்ற பின்னரே கிருமித்தொற்று இருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். இதற்கு என்ன காரணம்?

வாசிப்புநேரம் -
COVID-19 கிருமித்தொற்று உறுதியாகும் முன் நோயாளிகள் பல முறை மருத்துவரிடம் செல்கின்றனர். ஏன்?

(படம்: Tolga AKMEN/AFP)

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நோய் இருப்பதாக உறுதிசெய்யப்படும் முன் பல முறை மருத்துவரிடம் சென்றிருந்தனர்.

சில நோயாளிகளிடம் நோய் இருப்பது உடனடியாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. வேறு சிலரோ பல முறை மருத்துவரிடம் சென்ற பின்னரே கிருமித்தொற்று இருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். இதற்கு என்ன காரணம்?

1) முதலில் அறிகுறிகள் தெளிவாகத் தெரிவதில்லை

COVID-19 கிருமித்தொற்றின் அறிகுறிகள், சாதாரண கிருமித்தொற்றைப் போலவே இருக்கும் . இதனால் நோயாளிகள் முதன்முறை செல்லும்போது அவர்களுக்குக் கிருமித்தொற்று இருப்பதை மருந்தகங்களில் உள்ள மருத்துவர்கள் எளிதில் அடையாளம் காண முடியாது.

நோயாளிகள் அண்மையில் சீனா சென்றார்களா அல்லது ஏற்கனவே நோய் இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்தனரா என்பதைக்கொண்டே அவர்களை மருத்துவர்கள் மேலும் பரிசோதனை செய்கின்றனர்.

உடலில் கிருமியின் அளவு குறைவாக இருக்கும்போது அதை வைத்து (பரிசோதனைகளின்வழி) நோய் இருப்பதைத் திட்டவட்டமாகக் கூறிவிடமுடியாது என்று தேசியத் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

2) பரிசோதனைகளில் சிரமங்கள்

சுகாதாரப் பரிசோதனைக்குத் தேவையான மாதிரிகள் சில நேரங்களில் சரியாக எடுக்கப்படுவதில்லை. கிருமித்தொற்றுக்கான ஆகத் துல்லியமான முடிவுகளைப் பெற, பரிசோதனை மாதிரி மூக்கின் பின்புறத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்று TODAY இணையப்பக்கத்திடம் கூறினர் மருத்துவர்கள்.

மாதிரி சரியாக இல்லையெனில், பரிசோதனை முடிவுகளும் சரியாக இருக்காது என்று கூறப்பட்டது. 

3) கிருமித்தொற்றை உறுதிசெய்ய பல பரிசோதனைகள் தேவையா?

2003இல் ஏற்பட்ட SARS கிருமித்தொற்றை அடையாளம் காண பயன்படுத்தப்பட்ட polymerase chain reaction (PCR) பரிசோதனை COVID-19க்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், கிருமிகளின் தன்மை சற்று வேறுபடுவதால், COVID-19-ஐ அதே அளவு துல்லியமாக அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாய் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

4) கிருமித்தொற்று இருப்பதாய்ச் சந்தேகிக்கப்படுபவர்கள் என்ன செய்யவேண்டும்?

கிருமித்தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியாகவில்லை, ஆனால் அறிகுறிகள் தொடர்ந்து இருக்கின்றன என்று தெரியவந்தால் மீண்டும் மருத்துவரிடம் செல்லுமாறு ஆலோசனை கூறப்படுகிறது.

மருத்துவ விடுப்பில் இருக்கும் நபர்கள் நிலைமை மோசமடைந்தால் மீண்டும் மருத்துவர்களிடம் செல்லவேண்டும்.

மருத்துவர்களும் சற்று கூடுதல் காலம் மருத்துவ விடுப்பு கொடுப்பது சிறந்தது என்று கூறப்படுகிறது.

மருத்துவ பரிசோதனை முடிவுக்குக் காத்திருக்கும் வேளையில் உடல்நலம் சரியில்லாதவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்