Images
  • covid sg

சிங்கப்பூரில் இன்று புதிதாக 642 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று

சிங்கப்பூரில் இன்று புதிதாக 642 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,068 ஆனது.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

6 பேர், சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் எனச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

மேல் விவரங்களை அமைச்சு இன்றிரவு வெளியிடும்.

முன்னதாக, நேற்று 838 பேர் குணமடைந்து இருப்பிடம் திரும்பியதாக அமைச்சு தெரிவித்திருந்தது. இதுவரை 12 ஆயிரத்து-955 பேர் குணமடைந்துள்ளனர்.

8 பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாய் அமைச்சு நேற்று கூறியிருந்தது.  

Top