Images
  • Kit
    படம்: AFP

4 விதமான சுய பரிசோதனைக் கருவிகளின் விற்பனைக்கு இடைக்கால ஒப்புதல்

சுகாதார அறிவியல் ஆணையம், 4 விதமான கோவிட்-19 சுய பரிசோதனைக் கருவிகளின் விற்பனைக்கு இடைக்கால ஒப்புதல் அளித்துள்ளது.

Abbott PanBioTM COVID-19 Antigen Self-test,
QuickVue At-Home OTC COVID-19 Test,
SD Biosensor SARS-CoV-2 Antigen Self-Test Nasal,
SD Biosensor Standard Q COVID-19 At Home Test எனும் அந்தக் கருவிகளைப் பொதுமக்கள் வாங்கிக்கொள்ளலாம்.

எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய அவற்றின் மூலம் 20 நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் முடிவுகளைப் பெறமுடியும்.

Guardian, Unity, Watsons ஆகிய கடைகளில் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து
சுய பரிசோதனைக் கருவிகள் விற்பனைக்கு வரும்.

படிப்படியாக மேலும் பல மருந்துக் கடைகளிலும் அவை விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அனைவருக்கும் போதுமான அளவில் கருவிகள் இருப்பதை உறுதிசெய்ய, ஒருவர், தற்போதைக்கு அதிகபட்சம் 10 கருவிகளை மட்டுமே வாங்கமுடியும்.

தனிநபர்கள் கிருமித்தொற்றை உடனடியாகக் கண்டறிய சுய பரிசோதனைக் கருவிகள் கைகொடுக்கும் என்று அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு குறிப்பிட்டது.

கருவிகள் குறித்த கூடுதல் விவரங்களைச் சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.  

Top