Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'உற்பத்தி, சேவைத் துறைகளுக்கும் ஆதரவு நடவடிக்கைகள் அவசியம்'-டாக்டர் கோ போ கூன்

நீண்டகால வர்த்தக உருமாற்றத் திட்டங்களிலுள்ள இடைவெளிகளையும் குறைகளையும் கண்டறிய நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் உதவலாம் என்று வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் டாக்டர் கோ போ கூன் (Koh Poh Koon), கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
'உற்பத்தி, சேவைத் துறைகளுக்கும் ஆதரவு நடவடிக்கைகள் அவசியம்'-டாக்டர் கோ போ கூன்

(படம்: AFP/Roslan Rahman)

நீண்டகால வர்த்தக உருமாற்றத் திட்டங்களிலுள்ள இடைவெளிகளையும் குறைகளையும் கண்டறிய நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் உதவலாம் என்று வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் டாக்டர் கோ போ கூன் (Koh Poh Koon), கூறியுள்ளார்.

நிறுவனங்கள் தங்கள் குறிக்கோள்களையும் முன்னுரிமைகளையும் தொடர்ந்து கண்காணிக்க அக்குழுக்கள் வாய்ப்புகளை உருவாக்கித் தரலாம் என்று அவர் சொன்னார்.

COVID-19-பரவலால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட போக்குவரத்து, பயணத் துறைகளுக்கு அறிவிக்கப்பட்ட ஆதரவு நடவடிக்கைகள் போல, உற்பத்தி, சேவைத் துறைகளுக்கும் அவை அவசியம் என்று டாக்டர் கோ தெரிவித்தார்.

சீனத் தொழிற்சாலைகள் நீண்ட காலம் முடங்கினால், தொடர் விநியோகத்துக்கு இடையூறு நேரக்கூடும்.

COVID-19இன் அத்தகைய எதிர்பாராத விளைவுகளால் உற்பத்தி, சேவைத் துறை நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்று அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், 1,000 நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் மூன்று ஆண்டுகளுக்குள் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.

ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த இதுவரை 350க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலையில் தொடர்ந்து நீடிக்க, அதுபோன்ற முயற்சிகள் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்