Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 கிருமித்தொற்று: புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எங்கெங்கே சென்றனர்?

சிங்கப்பூரில் மேலும் 3 பேருக்கு Covid-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 கிருமித்தொற்று: புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எங்கெங்கே சென்றனர்?

கோப்புப்படம்

சிங்கப்பூரில் மேலும் 3 பேருக்கு Covid-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் யாரும் அண்மையில் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்ளவில்லை.

புதிதாகக் கிருமி தொற்றியோரில் ஒருவர் DBS வங்கி ஊழியர்.

மற்ற இருவரும் தங்ளினிலும், புக்கிட் பாத்தோக்கிலும் அமைந்திருக்கும் Grace Assembly of God தேவாலயங்களுக்குச் சென்றிருந்தனர்.

48ஆவது சம்பவம்:

* 34 வயது சிங்கப்பூர் ஆடவர்.
* ஜனவரி 26, மலேசியா சென்றிருந்தார்.
* தற்போது தேசியத் தொற்றுநோய் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 2ஆம் தேதி உடல்நலம் சரியில்லாததால் அவர் மருந்தகத்திற்கு சென்றார்; அதன் பிறகு 4 முறை வெவ்வேறு தினங்களில் வெவ்வேறு மருந்தகங்களை நாடினார்.

பிளாசா சிங்கப்பூரா, ஸ்டார் விஸ்டா, Fusionopolis ஆகிய இடங்களுக்கு ஆடவர் சென்றிருந்தார்.

49ஆவது சம்பவம்:

*46 வயது சிங்கப்பூர் ஆடவர்.
*தற்போது தேசியத் தொற்றுநோய் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 3ஆம் தேதி மருந்தகத்திற்கும் 8, 10ஆம் தேதிகளில் மருத்துவமனைக்கும் சென்றார்.

அவரது வீடு தோ குவான் ரோட்டில் அமைந்திருக்கிறது.


50ஆவது சம்பவம்:

* 62 வயது சிங்கப்பூரர்.
* DBS வங்கி ஊழியர்.

அவர் மரீனா பே நிதி நிலையத்தில் உள்ள 43ஆவது மாடியில் பணியாற்றினார்.

ஆடவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த மற்ற ஊழியர்களும் கண்காணிக்கப்படுகின்றனர்.

சிங்கப்பூரில் Covid-19 கிருமி தொற்றியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 35 பேரில் 8 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்