Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அங் மோ கியோ ரயில் நிலையம், ION Orchard உள்ளிட்ட இடங்களுக்குக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் சென்றிருந்தனர்

அங் மோ கியோ ரயில் நிலையம், ION Orchard உள்ளிட்ட இடங்களுக்குக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் சென்றிருந்தனர்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் அங் மோ கியோ ரயில் நிலையம், ION Orchard கடைத்தொகுதி உள்ளிட்ட இடங்களுக்கு நோய் தொற்றியிருந்த காலக்கட்டத்தில் சென்றிருந்தனர்.

சுகாதார அமைச்சு அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.

பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மேலும் சில இடங்கள்:

மே 30 : மார்சிலிங் கடைத்தொகுதியில் உள்ள Sheng Siong பேரங்காடி

ஜூன் 5 : Divine Beauty (303 உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 31 )

ஜூன் 5, 6, 7, 9 : ION Orchard கடைத்தொகுதியில் உள்ள Guardian கடை

ஜூன் 8 : The One Hairstyling Studio (123 லோராங் 1 தோ பாயோ)

ஜூன் 8 : அங் மோ கியோ ரயில் நிலையம்

பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றிருந்தோர், 14 நாள்களுக்கு உடல்நலத்தை அணுக்கமாகக் கவனிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சளிக்காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடவேண்டும் என்று சுகாதார அமைச்சு ஆலோசனை கூறியது.

கிருமித்தொற்று உறுதியானோர் சென்றுவந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை என்றும் அது சொன்னது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்