Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: சிங்கப்பூரில் நேற்றுப் புதிதாக நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 5 பேர் சிறுவர்கள்

COVID-19: சிங்கப்பூரில் நேற்றுப் புதிதாக நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 5 பேர் சிறுவர்கள்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நேற்று 157 பேருக்கு, புதிதாக COVID-19 நோய்த்தொற்று அடையாளம்காணப்பட்டது.

சமூக அளவில், 20 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் சிறுவர்கள்.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இரண்டு வயதிலிருந்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களில் 4 பேர் பள்ளி மாணவர்கள்.

அவர்கள் வீட்டில் இருப்போருக்குக் கிருமித்தொற்று முன்னர் உறுதிசெய்யப்பட்டதால், ஏற்கனவே அந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சு அதனைத் தெளிவுபடுத்தியது.

அண்மை நாள்களில் சமூக அளவிலான நோய்த்தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சமூக அளவில் சென்ற வாரம், தினசரி புதிதாக பாதிக்கப்பட்டோரின் சராசரி எண்ணிக்கை 14;
அதற்கு முந்தின வாரம் அது 8-ஆக இருந்தது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.

அவர்களில் இருவர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். மற்றவர் பிலிப்பீன்ஸிலிருந்து வந்தவர்.

சிங்கப்பூரில் 45,140 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மேலும் 285 பேர் உடல்நலம் தேறி வசிப்பிடம் திரும்பினர்.

இதுவரை 41,002 பேர் முழுமையாக உடல்நலம் தேறியுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்