Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊழியர்களை வழக்கமான COVID-19 பரிசோதனைகளுக்கு அனுப்பத் தவறிய 2 நிறுவனங்களுக்கு வேலை உரிமச் சலுகைகள் ரத்து

ஊழியர்களை வழக்கமான COVID-19 பரிசோதனைகளுக்கு அனுப்பத் தவறிய இரண்டு நிறுவனங்களின் வேலை உரிமச் சலுகைகளை மனிதவள அமைச்சு ரத்துசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஊழியர்களை வழக்கமான COVID-19 பரிசோதனைகளுக்கு அனுப்பத் தவறிய 2 நிறுவனங்களுக்கு வேலை உரிமச் சலுகைகள் ரத்து

(படம்: Singapore Ministry of Manpower)

ஊழியர்களை வழக்கமான COVID-19 பரிசோதனைகளுக்கு அனுப்பத் தவறிய இரண்டு நிறுவனங்களின் வேலை உரிமச் சலுகைகளை மனிதவள அமைச்சு ரத்துசெய்துள்ளது.

அந்த நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்கள் பரிசோதனைக்குச் செல்லாததற்குத் தகுந்த காரணங்களைக் கொடுக்கவில்லை அல்லது பரிசோதனைகளிலிருந்து விலக்கு பெறுவதற்குரிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவில்லை.

நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் மாற்று வேலைகளைத் தேடிக்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

COVID-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வழக்கமாகச் செய்யப்படும் பரிசோதனைகளுக்கு ஊழியர்களை அனுப்பத் தவறிய நிறுவனங்களுக்குத் தண்டனைகள் விதிக்கப்படுவது இதுவே முதன்முறை.

செப்டம்பர் 5-ஆம் தேதிக் காலக்கெடுவுக்குள் ஊழியர்களைப் பரிசோதனைகளுக்கு அனுப்புமாறு ஆகஸ்ட் மாதத்திலிருந்து நினைவூட்டப்பட்டது.

பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய சுமார் 2,200 ஊழியர்கள் அவற்றைச் செய்துகொள்ளவில்லை. அவர்களில் பாதிப்பேர் மட்டுமே பரிசோதனைகளைச் செய்யத் தேதி குறித்துள்ளனர்.

அந்த ஊழியர்களின் AccessCode செயலி 'சிவப்புக்' குறியீட்டைக் கொண்டிருக்கும். அவர்கள் வேலைக்குத் திரும்ப அனுமதியில்லை.

உரிய காரணங்கள் இன்றிப் பரிசோதனைகளுக்கு ஊழியர்களை அனுப்பத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்