Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மத்திய சேமநிதிக் கணக்கில் உள்ள தொகைக்குக் கூடுதல் வட்டி

மத்திய சேமநிதிக் கணக்கில் உள்ள தொகைக்குக் கூடுதல் வட்டி

வாசிப்புநேரம் -
மத்திய சேமநிதிக் கணக்கில் உள்ள தொகைக்குக் கூடுதல் வட்டி

(கோப்புப் படம்: TODAY)

மத்திய சேமநிதிக் கணக்கில் உள்ள தொகைக்கு அனைத்து வயதினருக்கும் வழக்கம்போல வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவதாக மத்திய சேமநிதிக் கழகம் தெரிவித்துள்ளது.

மூன்றாம் காலாண்டுக்கான வட்டி விகிதம் குறித்து கழகம் இன்று அறிவித்தது.

55 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மத்திய சேமநிதிக் கணக்கில் உள்ள தொகைக்குத் தொடர்ந்து ஒரு விழுக்காடு கூடுதல் வட்டி வழங்கப்படும்.

பொதுவாக, மத்திய சேம நிதிக் கணக்கில் உள்ள கூட்டுத்தொகையில் முதல் 60,000 வெள்ளிக்குக் கூடுதல் வட்டி கொடுக்கப்படும்.

அதில் முதல் 20,000 வெள்ளி சாதாரண கணக்கில் உள்ள தொகையாக இருக்கும்.

சாதாரண கணக்கில் உள்ள தொகைக்கு வழக்கம்போல, ஆண்டுக்கு 3.5 விழுக்காடு வட்டி விகிதம் தொடரும்.

சிறப்புக் கணக்கு, MediSave கணக்குகளில் உள்ள தொகைக்கு ஆண்டுக்கு 5 விழுக்காடு வட்டி விகிதம் தொடரும்.

55 வயதுக்கு மேற்பட்டோருக்கு கணக்கில் உள்ள முதல் 30,000 வெள்ளிக்கு அரசாங்கம் எப்போதும்போல கூடுதலாக 2 விழுக்காடு வட்டி வழங்கும்.

மேற்கொண்டு, அடுத்த 30,000 வெள்ளிக்கும் கூடுதலாக 1 விழுக்காடு வட்டி வழங்கப்படும்.

இதனால் 55 வயதுக்கு மேற்பட்டோர் தங்கள் ஓய்வுக் கணக்குகளில் ஆண்டுக்குச் சுமார் 6 விழுக்காடு வட்டி பெறுவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்