Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மூத்த ஊழியர்களுக்கான மத்திய சேமநிதிச் சந்தா விகிதம் உயர்த்தப்படலாம்

மூத்த ஊழியர்களுக்கான மத்திய சேமநிதிச் சந்தா விகிதம், விரைவில் உயர்த்தப்படலாம் எனப் பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளருமான திரு. இங் சீ மெங் (Ng Chee Meng) கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
மூத்த ஊழியர்களுக்கான மத்திய சேமநிதிச் சந்தா விகிதம் உயர்த்தப்படலாம்

(படம்: TODAY)

மூத்த ஊழியர்களுக்கான மத்திய சேமநிதிச் சந்தா விகிதம், விரைவில் உயர்த்தப்படலாம் எனப் பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளருமான திரு. இங் சீ மெங் (Ng Chee Meng) கூறியிருக்கிறார்.

இளைய ஊழியர்களின் சந்தா விகிதத்துக்கு ஈடாக அது உயர்த்தப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டு 55 வயதை எட்டியவர்கள், கூடுதலாக 31,000 வெள்ளியிலிருந்து 145,000 வெள்ளி வரை சேமிக்க முடியும் எனக் கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய அண்மை ஆய்வில் தெரிய வந்தது.

55இலிருந்து 64 வயது வரையிலான 10 ஆண்டு காலத்தில், முழுமையான சந்தா விகிதம் வழங்கப்பட்டால் அது சாத்தியம் எனக் கூறப்படுகிறது.

ஊழியர்களின் ஓய்வு வயது, மறு வேலைவாய்ப்பு வயது, மத்திய சேமநிதிச் சந்தா விகிதம் ஆகியவற்றின் மறுஆய்வு குறித்த விவரங்களை மனிதவள அமைச்சு அடுத்த மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்