Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஓய்வுக்காலத் தொகை நிரப்பும் திட்டம்: மறுஆய்வு ஆண்டிறுதிக்குள் நிறைவடையும் - மனிதவள அமைச்சு

மத்திய சேமநிதிக் கணக்கின் ஓய்வுக்காலத் தொகை நிரப்பும் திட்டத்தின்கீழ், சம்பந்தப்பட்டவருக்குப் பணத்தைத் திரும்ப வழங்குவது தொடர்பில் விதிமுறைகளை மறுஆய்வு செய்யும் அரசாங்கத்தின் பணி இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடையும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஓய்வுக்காலத் தொகை நிரப்பும் திட்டம்: மறுஆய்வு ஆண்டிறுதிக்குள் நிறைவடையும் - மனிதவள அமைச்சு

(கோப்புப் படம்: TODAY)

மத்திய சேமநிதிக் கணக்கின் ஓய்வுக்காலத் தொகை நிரப்பும் திட்டத்தின்கீழ், சம்பந்தப்பட்டவருக்குப் பணத்தைத் திரும்ப வழங்குவது தொடர்பில் விதிமுறைகளை மறுஆய்வு செய்யும் அரசாங்கத்தின் பணி இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடையும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

மனிதவள அமைச்சும் மத்திய சேமநிதிக் கழகமும் விதிமுறைகளை மறுஆய்வு செய்துவருகின்றன.

மூத்த சிங்கப்பூரர்களுக்கான அந்தத் திட்டத்தின்கீழ் தற்போது அவர்களின் 95 வயதுவரை பணத்தைத் திரும்பப் பெற முடிகிறது.

95 வயது என்பது வெகுநீண்ட காலம் என்று பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ மீ ஹார் அதுகுறித்து நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மனிதவள அமைச்சு இன்று எழுத்துபூர்வமாக பதிலளித்தது.

மத்திய சேமநிதி சந்தாதாரர்கள் திரும்பப்பெறும் தொகையை உயர்த்தும் வகையில் விதிமுறைகள் மறுஆய்வு செய்யப்படுமா என அவர் கேட்டிருந்தார்.

RSS எனும் ஓய்வுக்காலத் தொகை நிரப்பும் திட்டம் 1958ஆம் ஆண்டுக்குமுன் பிறந்தவர்களுக்கானது. அவர்கள் 65 வயதை எட்டும்போது திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்