Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுக் கழிவுநீர் குழாய்களில் ரசாயனங்களை வெளியிட்ட நிறுவனத்திற்கு வேலை நிறுத்த உத்தரவு

பொதுக் கழிவுநீர் குழாய்களில் ஆபாயகரமான ரசாயனங்களை வெளியிட்டதற்காக Cramoil Singapore நிறுவனத்துக்கு வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

பொதுக் கழிவுநீர் குழாய்களில் ஆபாயகரமான ரசாயனங்களை வெளியிட்டதற்காக Cramoil Singapore நிறுவனத்துக்கு வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயனீட்டுக் கழகம் அந்த உத்தரவைப் பிறப்பித்தது.

தொழிலியல் கழிவுப் பொருட்களைச் சேகரிக்கும் நிறுவனம், Cramoil.

அதுவே, அத்தகைய குற்றத்துக்காக வேலை நிறுத்த ஆணையைப் பெற்றிருக்கும் முதல் நிறுவனம்.

அந்த நிறுவனத்தின் கழிவு நீரில், தடைசெய்யப்பட்ட 16 அம்சங்களைப் பொதுப் பயனீட்டுக் கழகம் கண்டிபிடித்தது.

அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக, 5 வகை உலோகங்களும், ரசாயனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

அத்தகைய நச்சு பொருட்கள் தீச் சம்பவங்களை ஏற்படுத்தலாம் எனக் கழகம் கூறியது.

பொதுக் கழிவுநீர் குழாய் முறை ஊழியர்களுக்கும் அது ஆபத்தை விளைவிக்கலாம்.

பயன்படுத்தப்பட்ட தண்ணீருக்கான சுத்திகரிப்பு முறையையும் அது பாதிக்கலாம்.

Cramoil Singapore நிறுவனம் அத்தகைய குற்றத்தைப் புரிந்திருப்பது, இது முதல் முறையல்ல.

கடந்த 8 ஆண்டில், தடைசெய்யப்பட்ட அம்சங்களைப் பொது கழிவு நீர் குழாய்களில் வெளியிட்டதாக அந்நிறுவனம் மீது 20 முறை குற்றங்கள் பதிவாகின.

அதற்கு, அதிகபட்சம் 100 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்