Images
  • velmurugan
    (படம்: Facebook/ItsRainingRaincoats)

பாரந்தூக்கி விழுந்து மாண்ட இந்திய ஊழியரின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க முன்வந்துள்ள கட்டுமானத் தள ஊழியர்கள், குத்தகையாளர்கள்

பாரந்தூக்கி விழுந்து மாண்ட இந்திய ஊழியரின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க கட்டுமானத் தளத்தின் ஊழியர்களுடனும், குத்தகையாளர்களுடனும் இணைந்து செயல்படுவதாக The Migrant Workers' Centre (MWC) எனும் வெளிநாட்டு ஊழியர் நல அமைப்பு தெரிவித்தது.

மாண்ட ஊழியர் வேல்முருகனின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கப்படுவதற்கு முன், இடைப்பட்ட காலத்தில், குடும்பத்தாருக்கு பண உதவி வழங்கத் திட்டமிடுவதாக அமைப்பு அதன் Facebook பக்கத்தில்தெரிவித்தது.

இழப்பீடு வழங்குவதற்கு 6 மாதங்கள் வரை எடுக்கலாம் என்று MWC குறிப்பிட்டுள்ளது.

பண உதவி வழங்குவதுடன் வேல் முருகனின் மனைவிக்கு அடிப்படை நிதி நிர்வாகத்தைப் பற்றி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யவுள்ளதாக அமைப்பு கூறியது.

உதவியாக வழங்கப்படும் நிதியை நீண்ட கால அடிப்படையில் உபயோகிக்க அது உதவும் என்று MWC கூறியது.

டான் டோக் செங்க் மருத்துவமனையின் கட்டுமானத் தளத்தில் பாரந்தூக்கி முறிந்து விழுந்ததில் 28 வயது வேல்முருகன் மாண்டார். அவரின் நல்லுடல் புதன்கிழமை (6 அக்டோபர்) இந்தியாவுக்குக் அனுப்பி வைக்கப்பட்டது.


 

Top