Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திருடப்பட்ட கடன்பற்று அட்டை விவரங்களைக் கொண்டு $20,000 மதிப்புடைய பொருள்களை வாங்கிய ஆடவருக்குச் சிறை

திருடப்பட்ட கடன்பற்று அட்டை விவரங்களைக் கொண்டு 20,000 வெள்ளிக்கு மேற்பட்ட மதிப்புடைய பொருள்களை வாங்கியதற்காக ஆடவர் ஒருவருக்கு இன்று 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
திருடப்பட்ட கடன்பற்று அட்டை விவரங்களைக் கொண்டு $20,000 மதிப்புடைய பொருள்களை வாங்கிய ஆடவருக்குச் சிறை

(படம்: Vanessa Lim/ CNA)

திருடப்பட்ட கடன்பற்று அட்டை விவரங்களைக் கொண்டு 20,000 வெள்ளிக்கு மேற்பட்ட மதிப்புடைய பொருள்களை வாங்கியதற்காக ஆடவர் ஒருவருக்கு இன்று 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

27 வயதான ஜான் ஃபூ சி யாங் (John Foo Chi Yang) 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட்டிலிருந்து இரண்டு மாத காலத்தில் அக்குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.

Honestbee இணையத் தளத்தில் பொருள்களை வாங்கி, Carousell செயலியில் அவற்றை ஃபூ மறுவிற்பனை செய்தார்.

முறைகேடான கணினிப் பயன்பாடு, இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 20 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் 50 குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

திறந்த மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்தி சிலரின் கடன் அட்டை விவரங்களை அவர் திருடினார்.

பாதிக்கப்பட்ட கடன் அட்டை உரிமையாளர் ஒருவர் அது பற்றிக் காவல்துறையிடம் புகார் செய்தார்.

Honestbee அதன் இணையத் தளத்தில் இடம்பெற்ற சந்தேகத்துக்குரிய பரிமாற்றங்கள் பற்றித் தெரிவித்தது.

அதனையடுத்து ஃபூ 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்